價格:免費
更新日期:2016-02-12
檔案大小:1.3M
目前版本:1.0
版本需求:Android 4.0.3 以上版本
官方網站:http://www.rathinagiri.in
Email:srathinagiri@gmail.com
1947 முதல் 1949 வரை MX981 என்னும் புராஜக்ட் எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் (முராக் எனும் இடத்தில்) ஒரு அறிவியல் சோதனை செய்வதற்காக :) ஏற்படுத்தப்பட்டது.
அதில் எட்வர்ட் மர்பி அவர்கள் மின்சார மீட்டர்களைப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட ஒரு தவறுக்கு அவரது உதவியாளரைக் காரணம் காட்டி சொன்னதே முதல் மர்பி விதியாகும். அந்த விதி, "If that guy has any way of making a mistake, he will." அதன் பின்னரே, மிகவும் பிரசித்தி பெற்ற "ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பிருக்குமேயானால், அது தவறாகவே நடக்கும்" - "If it can go wrong, it will" போன்ற விதிகள் அவரால் சொல்லப்பட்டன.
ஆனால் இது வெளியே வந்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரி, ஸ்டேப் (Stapp) என்பவர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தனது உதவியாளர் மர்பியை மறக்காமல் குறிப்பிட்டு, அவரது இந்த விதிகளைத் தாங்கள் உதாசீனப்படுத்தாமல் கவனத்துடன் செயல்பட்டதால் தங்களால் சாதிக்க முடிந்தது என்று கூறியது தான்.
மர்பிக்குப் பின்னர் பலரும் இது போன்ற விதிகளை வெளியிட்டாலும் அவையனைத்தையும் மர்பி விதிகள் என்றே தாங்களும் அழைக்கத் துவங்கியதால் மர்பி விதிகள் என்பது கேலியுடன் கூடிய எதிர்மறையான விதிகளுக்கு பொதுப்படையான பெயராக அமைந்து விட்டது.
ஆங்கில மொழியிலிருந்து இது போன்ற 1700 விதிகளை இங்கே மொழிபெயர்த்ததும், தொகுத்ததும் மென்பொருளாக்கம் செய்து இங்கே வழங்கப்பட்டுள்ளது.